இந்த நிலைக்கு உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தை பற்றி மற்றவர்களிடத்தில் பயமூட்டும் நிகழ்ச்சி நிரலான இஸ்லாமோபோபியா பிரச்சாரமும் ஒரு காரணமாகும். இந்த நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம்கள் அசாதாரண, வன்முறையான தீவிரவாத மனநிலை உள்ளவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டப்படுகிறார்கள். அத்துடன் இஸ்லாம் என்ற மார்க்கம் எவ்வாறு பொறுமை குணத்தை முன்னிலைப்படுத்துகிறது, இஸ்லாமிய வரலாறு மற்றும் அதன் இயல்பு எவ்வாறு பொறுமைகாத்தலுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பது பற்றிய அறியாமையும் ஆகும்.
முஸ்லிம்களின் அதீத பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் உதாரணங்களாக சுட்டிக்காட்டக்கூடிய விடயங்களை பற்றி இந்த கட்டுரை ஆராய்கின்றது.
முஸ்லிமல்லாதோரால் ஆளப்படும் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு என்ன நிகழ்ந்தது?
கம்யூனிச ரஷ்யாவில் முஸ்லிம்கள் பலாத்காரமாக சைபீரியா பிரதேசத்துக்கு கட்டாய ஊழியத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். கிழக்கு ஐரோப்பாவின் போஸ்னியா மற்றும் ஸ்ரேப்றேநிக்கா பகுதிகளில் இனச்சுத்திகரிப்புக்கு ஆளானார்கள். 60 வருடங்களாக சொந்த மண்ணில் அகதிகளாக, சிறைக்கைதிகளாக பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஸ்பெயின நாட்டில் அதான் கூறுவதற்கு கூட ஒருவரும் அற்ற நிலைவரை மொத்தமாக கருவருக்கப்பட்டார்கள்.
இதே வேளை முஸ்லிம்களின் ஆட்சிக்குப்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாதோரின் நிலை எவ்வாறு இருந்தது?
முகலயார்களின் இந்திய ஆட்சியில் இந்துக்கள் சுதந்திரமாக், வளமாக வாழ்ந்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு முன்னேறினார்கள். உமையாக்களின் ஸ்பெயின ஆட்சியில் மிகவும் மகிச்சிகரமான முறையில் முஸ்லிமல்லாதோர் வாழ்ந்து வந்தனர். உதுமானிய பேரரசில் யூதர்கள் செழிப்பாக வாழ்ந்து வந்தனர். சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இன்னும் கணிசமான அளவில் முஸ்லிம் அல்லாதோர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் எவ்வித பிரச்சினைகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த நாடுகளில் இவர்களின் இருப்பு 1400 ஆண்டுகள் பழமையானது.
தற்காலத்தில் முஸ்லிம்கள் மீது பூசப்படும் சகிப்பு தன்மை அற்றவர்கள் என்ற சாயத்துக்கு மாற்றமாக முஸ்லிம்கள் தம்முடன் வாழும் ஏனைய சமூகத்தவருடன் மிகவும் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தற்பொழுது முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மை இருக்குமாயின் மேற்குறிப்பிட்ட முஸ்லிம் ஆட்சிகளில் வாழ்ந்த, வாழ்கின்ற அந்நிய இன மக்கள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் சுத்திகரிக்கப்பட்டது போல சுத்திகரிக்கப்பட்டிருப்பர்.
ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தால் அல்லது ஒரு நாடு பிறிதொரு நாட்டினால் வெற்றி கொள்ளப்படும் போது தோல்வியடைந்த சாராரின் எந்த ஒரு விடயமும் வெற்றி பெற்றவர்களால் பெரிதாக மதிக்கப்படுவதில்லை என்பது தற்கால நடைமுறை ஆகும்.
இந்நாட்களில் இஸ்லாம் மனித குலத்துக்கு எந்த வித அனுகூலமும் புரியாத, ஒரு பிற்போக்கான சமுதாயத்தால் பின்பற்றப்படும் மார்க்கம் என்ற ரீதியான ஒரு பிரச்சாரம் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதை பொய்யென்று நிரூபிக்கும் வகையில் அதிகளவான ஆதாரங்கள் இஸ்லாத்தில் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளில் காணப்படுகின்றன. இஸ்லாமிய கிலாபத்துக்களில் மாற்று மத பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஒரு ஆரோக்கியமான மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. நாடுகளை வெற்றி கொண்ட இஸ்லாமிய படைகள் வெற்றிகொள்ளப்பட்ட சமுதாயங்களிடமிருந்து தகவல்களை பெறுவதன் மூலம் உலகின் அறிவுக் காவலர்களாக இஸ்லாமிய கிலாபத்துகள் அமைவதற்கு சந்தர்ப்பம் கிட்டியது.
இவ்வாறான ஒரு அணுகுமுறையின் காரணமாக உலகின் புராதன பலகளைக்கழகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் நாகரிகங்களில் அமையபெற்றிருந்தத்தில் ஆச்சரியம் ஏதுமில்லை. கிரேக்கர்களின் தத்துவ ஞானம், புராதன இந்தியாவின் எண்கணித முறை மற்றும் நீர்ப்பாசன நிபுணத்துவம் என்பன குறித்த பிரதேசங்கள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னும் பாதுகாக்கப்பட்டன.
இதற்கு மாற்றமாக சிலுவைப்போரில் வெற்றி பெற்ற கிறிஸ்தவர்களின் பதிவுகளின் பிரகாரம் “ஜெருசலம் நகரில் எமது குதிரைகளின் முழங்கால் வரை முஸ்லிம்களின் இரத்த ஆறு ஓடியது” என நைட் டெம்ப்ளர் என்பவரால் பதியப்பட்டுள்ளது.
இந்த சிலுவைப்போர் வீரர்கள் தமது வெற்றியை மலைகளின் அழகிய குவிமாடத்தை மற்றும் மஸ்ஜிதுல் அக்சா பகுதிகளை மாளிகைகளாகவும் கோபுரங்களாகவும் மாற்றி கொண்டாடினார்கள். எனினும் ஒரு நூற்றாண்டுக்குள் சுல்தான் சலாஹுதீன் அவர்களால் முதலாம் மற்றும் இரண்டாம் சிலுவை யுத்தங்களில் காணப்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து மூன்றாவது சிலுவை யுத்தத்தில் ஜெருசலம் மீண்டும் மீட்கப்பட்டது. வெற்றி பெற்ற சுல்தான் சலாஹுதீன் அவர்களால் சிலுவை யுத்த வீரர்கள் தமது வெற்றிகளின் போது நடந்து கொண்டது போல் கிறிஸ்தவ மத ஆலயங்களை தகர்த்திருக்க முடியும். அவரது படையில் இருந்த சில படை வீரர்களும் அதையே விரும்பினார்கள். எனினும் சுல்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவோ அதை அனுமதிக்கவோ இல்லை.
இதற்கு மாற்றமாக ஜெருசலம் நகர கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரு தொகை பணத்தை செலுத்தி சரணடையலாம் என்று அறிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் பல ஏழை கிறிஸ்தவர்கள் தமக்கான கட்டுப்பணம் செலுத்த முடியாதவர்களாக இருந்ததை அவதானித்த சுல்தான் சலாஹுதீன், அவர்களின் கட்டுப்பணத்தை தமது சொந்தப்பணத்தில் இருந்து கட்டி அவர்களை விடுவித்தார். இந்த அழகிய முன்மாதிரியை அவதானித்த அவரின் படை வீரர்களும் அவ்வாறே செய்தனர்.
உலகளாவிய ரீதியில் யூதர்கள் எப்போதும் அடக்குமுறைக்குள்ளான சிறுபான்மையினராகவே ஐரோப்பாவில் வாழ்ந்து வந்தனர். சேரிப்புறங்களில் பஹிரங்கமாக அடக்குமுரைக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர். அடிக்கடி படுகொலைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு சொல்லொண்ணா துயருடன் வாழ்ந்து வந்தனர். ஸ்பெயினின் இபேரியன் வளைகுடாவில் வாழ்ந்த யூதர்கள் கத்தோலிக்க விச்கோதிக் அரசர்களால் துன்புறுத்தல்களின் உச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆரம்பத்தில் யூதர்களின் குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பறித்தெடுத்த இந்த அரசர்கள் ஒட்டு மொத்த யூதர்களையும் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் தான் இஸ்லாமிய படைகள் ஸ்பெயினை கைப்பற்றின. இதன் மூலம் யூதர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்ததோடு அவர்களின் வாழ்வும் மேம்பட தொடங்கியது. சமூக அந்தஸ்தை பெற்ற யூத இனம் அரச உயர் பதிவிகளில் கூட உள்வாங்கப்பட்டது.
ஏறத்தாள 800 வருட காலம் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி நிலவியது. பின்னர் கிறிஸ்தவ படைகளால் ஸ்பெயின் மீள கைப்பற்றப்பட்டபோது முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அன்று முஸ்லிம் உலகினால் அகதிகளாக உள்வாங்கப்பட்டனர். எனினும் இதன் போது வெளியேற்றப்பட்ட யூதர்களுக்கு என்ன நிகழ்ந்தது? இவர்களுக்கு இரண்டாவது தடவையும் முஸ்லிம்களே அபயமளித்தனர். துருக்கியின் சுல்தான் யூதர்களை காப்பாற்ற படகுகளை அனுப்பினார். மொரோக்கோவின் ஒரு முழு மாவட்டம் யூத குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டது.
ரசூலுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை பக்கங்களை புரட்டும் ஒருவர் இந்த உலகில் அவர்களை விட பொறுமையுள்ள, சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதரை காண மாட்டார். அவர்களின் ஆரம்ப காலத்தில் மக்கா வாசிகளால் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியபோது கூட தம்மை துன்புருத்திய மக்களை நோக்கி தனது குரலை உயர்த்தி கூட கடினமாக பேசாத மாமனிதர் அவர்.
தாயிப் நகரில் கல்லடிக்கு உள்ளான போது கூட ரசூலுல்லாஹ் அந்த நகர வாசிகளை சபித்ததில்லை. மக்கா வாசிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டு அந்த நிலையில் தனது அனபு மனைவி, மற்றும் தனது தந்தையின் சகோதரர் மரணித்த வேளையில் கூட மக்க வாசிகளை எதிர்த்து அன்னாரின் கரம் உயர்ந்ததில்லை.
மக்காவை வெற்றி கொண்ட பொழுது தமக்கு இன்னல் விளைவித்த அனைவரையும் பழிவாங்கும் சந்தர்ப்பம் அமைந்தும் கூட அவ்வாறு செய்து பெருந்தன்மையுடன் பொறுமையாகவே ரசூலுல்லாஹ் நடந்து கொண்டு நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்கள். எனினும் நிச்சயமாக ரசூலுல்லாஹ் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக கிளர்ந்து எழுந்துள்ளார்கள். ரசூலுல்லாஹ்வின் வாழ்வில் இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் ஒரு சமநிலை இருந்தது.
ரசூலுல்லாஹ் நமக்கு பொறுமையையும் அதன் எல்லையையும் கற்றுத்தந்துள்ளார்கள். எமது சமகால நிலையை பொறுத்த வரை எடுத்ததெற்கெல்லாம் வன்முறையில் இறங்குவதும் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட நினைக்கிறார்கள் என்று கூறி அவற்றை எதிர்க்காதிருப்பதுமே இந்த இரண்டு எல்லைகளுமாகும்.
(Source: latheeffarook.com; தமிழ்வடிவம்: காத்தான்குடி இன்போ)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.