......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

ஆணுறைகளை வைத்திருக்க பாலியல் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்

பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ஆணுறைகளை தம்வசம் வைத்திருப்பதை தவிர்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


ஆணுறைகளை வைத்திருப்பவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர். அத்துடன் பொலிஸார் தம்மை கைதுசெய்வதை தவிர்ப்பதற்காக அவ்வாறானவர்கள் ஆணுறைகளை வைத்திருப்பதில்லை. 

கல்கிரியகமவில் நடைபெற்ற விழிப்பூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுகாதார பரிசோதகர் யு.ஜி.ஜயசுந்தர கூறினார். 

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் ஆகிய பயங்கரமான நோய்களை தவிர்ப்பதற்காக ஆணுறையை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
 
இலங்கையில் விபசாரம் உள்ளது. இங்கு வெளிநாட்டவர்களும் பாலியல் தொழில் செய்கின்றனர். பாலியல் தொழிலாளி என சந்தேகிக்கப்படுபவர் கைதுசெய்யப்படின் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆணுறைகள் தடயப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் ஆணுறைகளை வைத்திருப்பதை தவிர்த்துவருகின்றனர்.

இது ஒரு பெரிய பிரச்சினை ஆகும். பால்வினை நோய்கள் பரவ இது காரணம் ஆகும்' இந்த பிரச்சினை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுடன் பேசிவருகின்றனர் என அவர் கூறினார். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE