இதேவேளை ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியான நிலையிலேயே காணப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'2030இல் சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு' என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் 'மதிநுட்பமாக சிந்திப்பது – எதிர்காலத்தை எதிர்வுகூறுவதை தவிர்ப்பது' குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச ரீதியில் முன்னணியில் காணப்படும் எனவும், இந்தியாவை விட உயர்வான போக்கில் காணப்பட்ட போதிலும், 2030ஆம் ஆண்டளவில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.