......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

இஸ்ரேல் உளவாளி அமெரிக்காவிடம் அரபு நாடுகள் தொடர்பில் தகவல் திரட்ட முயற்சி


சி.ஐ.ஏ. ஆவணம் தகவல்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஜொனதன் பொல்லார்ட் அமெரிக்கா தொடர்பில் உளவு பார்க்கவில்லை என்றும் அரபு நாடுகள் தொடர்பிலேயே உளவு பார்த்ததாகவும் சி.ஐ.ஏ. ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

வொஷிங்டனில் இருக்கும் இஸ்ரேல் தூதரகத்தில் அடைக்கலம் புக முற்பட்ட போது கடந்த 1985 ஆம் ஆண்டு பொல்லார்ட் கைது செய்யப்பட்டார்.
இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைக்கு உள்ளானார். இவர் தொடர்பான அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏயின் ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொல்லார்ட் அரபு அல்லது பாகிஸ்தான் அணுச் செயற்பாடுகள் மற்றும் அரபு நாடுகளின் ஆயுத சக்தி தொடர்பில் அமெரிக்காவிடம் தகவல் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
அத்துடன் 1985 ஆம் ஆண்டு துனீஷியாவில் உள்ள பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைமையக சுற்றிவளைப்புக்கு பொல்லார்ட் இஸ்ரேலுக்கு தகவல் வழங்கியதாகவும் சிரியாவுடனான கொலன் ஹைட்ஸ் எல்லைப் பகுதி மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் இஸ்ரேலுக்கு கூறியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இஸ்ரேல் தம்மிடம் கேட்டறியவில்லை என்றும் பொல்லார்ட் வாக்குமூலம் அளித்ததாக மேற்படி ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் கடந்த 1995 ஆம் ஆண்டு பொல்லார்ட்டுக்கு பிரஜா உரிமை வழங்கியதோடு அவரை விடுவிக்கும்படி அமெரிக்காவுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE