......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

மஞ்சள் மழை பெய்ததால் பரபரப்பு

நாட்டின் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளது மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மஞ்சள் மழை பெய்துள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுவிருத்தகிரி குப்பம் கிராமத்திலேயே  மஞ்சள் மழை பெய்துள்ளது.  

குறித்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில் திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் விழ ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து,மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்தில் மா போன்று காணப்பட்டது. 

இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்தது. மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE