......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

அமெரிக்கா குழந்தைகளை பாதுகாக்க தவறி விட்டது


ஒபாமா கவலை
சிறுவர்களை பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்த கனெக்டிகட் நியூடனிலுள்ள ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே ஒபாமா இவ்வாறு கூறினார்.

“நாம் அனைத்து குழந்தைகளினதும் பொறுப்பை ஏற்கவேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதே எமது முதல் இலக்கு. அதனை நாம் சரியாக செய்யாவிட்டால் வேறு எதனையும் எம்மால் செய்ய முடியாது” என ஒபாமா வலியுறுத் தினார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 20 பேர் குழந்தைகள். இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூ டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளின் பெயரையும் சாண்டி ஹ¥க் பாடசாலையின் அதிபர், ஆசிரியைகள் பெயரையும் வாசித்தார்.
அப்போது குழந்தைகளை காப்பாற்ற அன்பு கலந்த துணிச்சலுடன் போராடி உயிரை துறந்துள்ளனர் என பாராட்டினார். மேலும், அவர் கூறும்போது, இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதுபோன்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதில் அரசியல் உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் எனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற வன்முறை செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இச்சம்பவம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கான சட்டத்தின் மீது நாடு முழுவதும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மூலம் வன்முறை என்ற பிசாசை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டுவோம். பாடசாலை குழந்தைகளை பாதுகாப்பதில் எங்களுக்கு மிகுந்த கடமை உள்ளது. அதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றார்.
அஞ்சலி கூட்டத்துக்கு முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினரை தனித் தனியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது தாம் 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் கொல்லப்பட்டோருக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்றும் ஒபாமா சுட்டிக்காட்டினார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE