எம்.எஸ். பாஹிம்
இராணுவ பேச்சாளர்
பயிற்சியின் போது ஏற்பட்ட சிறு உபாதை காரணமாகவே இராணுவத் தில் சேர்க்கப்பட்ட 13 தமிழ் பெண்கள் சுகவீனமடைந்ததாகவும் த.தே. கூட்டமைப்பும் சில ஊடகங்களும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிக சூரிய தெரி வித்தார்.
இராணுவப் பயிற்சியின் போது இவ்வாறு சுகவீனமடைவது வழமை என்று கூறிய அவர் 11 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இராணுவத்திற்கு சேர்க்கப்பட்ட 13 பேர் சுகவீனமடைந்தது குறித்து தெரி விக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர்; கடந்த ஒரு வார காலத்திலே 13 பேர் சுகவீன முற்றனர்.
இராணுவ பயிற்சியின் போது இவ்வாறு இடம்பெறுவது வழமையான விடயம். இவர்களை பார்க்க குடும்பத்தவர்களுக்கு மருத்துவர்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.
த.தே. கூட்டமைப்பு எம்.பி. ஒருவருக்கு மனுமதிக்காததாலே தவறான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அரசியல் இலாபம் பெறும் நோக்கில் இது தொடர்பில் பொய் பிரசாரம் செய்கின்றனர். எஞ்சிய இரு பெண்களும் இன்று (14) ஆஸ்பத்திரியில் வெளியேறுவர் ஏனையவர்கள் வழமைபோல பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.