......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 1 December 2012
ஈரான் அறிமுகப்படுத்திய நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்
ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.
இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது.
இதன்போது 2 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவிக்கின்றது
மேலும் காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft) ஒன்றையும் ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரானானது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருகின்றமையை நிரூபிக்கும் ஆதாரமொன்றும் வெளியாகியுள்ளது.
இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஈரான் தனது உள்ளூர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது அமெரிக்க , இஸ்ரேல் உட்பட மேலைத்தேய நாடுகளுடனான உறவை மேலும் சீர்கெடச் செய்யுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.