......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

உலக்கையால் தாக்கி பெண் கொலை

பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு  அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று ஹொரண பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஹொரண ,கோணபொல மீபாகல என்னும் இடத்தைச்சேர்ந்த  47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது சடலம் வீட்டின் குளியல் அறையிலிருந்து  மீட்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்

ஆடைத்தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரியான அவரது கணவர் கடமைக்கு சென்றிருந்த நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சு பகுதியில் உலக்கையால் தாக்கப்பட்டு  அப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள போதிலும் அலுமாரியிலிருந்த பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE