புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஏழு ஆயிரம் கிலோ கருவாடு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.
இதில் ஆயிரம் கிலோ கிராம் நெத் தலி மீன், 500 கிலோ கிராம் சூரை மீன் கருவாடு, 1500 கிராம் குஞ்சு இறால் மீன் என்பனவும் அடங் குவதாக கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு கூறியது.
கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி காலாவதியான உணவுகள் மீட்கப்பட்டதோடு இவற்றை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.