......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

ரத்தோட்டையில் 6 வீடுகள் புதையுண்டன: 10பேரை காணவில்லை

மாத்தளை, ரத்தோட்டை நிக்கோலய மலையில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. அந்த வீடுகளுக்குள் ஆகக்குறைந்தது 10 பேர் சிக்குண்டிருக்கலாம் என மாத்தளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


சிக்குண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோரை மீட்கும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை,இயற்கை  அனர்த்தங்களினால் மாத்தளையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 வரையும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மாத்தளை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1528 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE