10 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே இந்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டை ரயில் நிலையத்தில் பெற்றோரை தவறவிட்டு சிறுவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்த கண்ட 45 வயதான முதியவர் அச்சிறுவனை தன்வசப்படுத்தி அழைத்துச்சென்று அச்சிறுவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்து ரயில் நிலைய மலசலக்கூடத்திற்குள் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
45 வயதான சந்தேக நபர் கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்ட்ட சிறுவனை மாகொல சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.