......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

31பேரின் சடலங்கைளைத் தேடி இன்றும் கௌதாரிமுனை கடற்கரையில் தேடுதல்


தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானப் பயணிகளின் சடலங்களைத் தோண்டும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றன. 

இருப்பினும், இதுவரையில் எவ்வித சடலங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி மேற்படி விமானம் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைத் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்போது குறித்த விமானத்தில் 48 பயணிகளும் 7 விமானப் பணியாளர்களும் உட்பட 55பேர் பயணித்திருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான விமானம் இரணதீவு நடுக்கடலில் விழுந்த நிலையில், 31பேரின் சடலங்கள் கௌதாரிமுனைக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன. இச்சடலங்கள், அப்பகுதி மீனவர்களால் கௌதாரிமுனை கடற்கரையின் மூன்று இடங்களில் புதைக்கப்பட்டதாக அவற்றைப் புதைத்த மீனவர்களில் ஒருவர் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன், குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அது இரணதீவு கடலில் விழுந்ததாகவும் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவரிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கடற்கரையில் புதைக்கப்பட்ட சடலங்களைத் தேடும் பணிகளும் நேற்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரையில் ஒரு சடலமேனும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இருப்பினும் சடலங்கைளத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர், கடலில் விழுந்துள்ள விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கையும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க) 





(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE