வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரிதிகள் மாத்திரம் காரணம் என சொல்லிவிட முடியாது பாதசாரிகளின் கவனயீனமும் அதில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு இடம்பெறுகின்ற வாகன விபத்துகளால் வருடத்துக்கு இரண்டாயிரத்துக்கு அதிகமா@னார் உயிரிழப்பதுடன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர்வரை காயமுற்று வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றும் செல்கின்றனர்.
வாகனச் சாரதிகள் நிதானமாக வாகனங்களை செலுத்துவதுடன் வீதி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு பாதசாரிகளும் வீதிகளை கடக்கம்போது மிகுந்த அவதானத்துடன் கடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.