......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 10 November 2012

கிழக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் - மக்கள் சந்திப்பு


(tamilmirror)(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரிலுள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடத்தினார். 

இதன்போது ஏராளமான பொதுமக்கள் அமைச்சரைச் சந்தித்து தமது குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இச் சந்திப்பில், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாத்தியமான வழிகள் மூலம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஏறாவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE