......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

மின்சார கம்பி வேளிகளை அமைக்க மாகாண அமைச்சர் உதுமாலெப்பை உத்தரவு



அம்பாறை மாவட்டத்தில் யானைகளின் தொல்லைகளிருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுமார் 14 கிலோ மீற்றருக்கு மின்சார கம்பி வேளிகளை அமைக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உத்தரவிட்டுள்ளார்.

மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தலைமையிலான குழுவினர் யானைகளின் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட ஒலுவில், ஆலிம்சேனை, பாலமுனை, பறடாக் குளம், ஆளம்குளம், சம்புநகர் மற்றும் தீகவாபி போன்ற கிராமங்களுக்கே நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போதே, யானைகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கலந்தாலோசித்தனர். சுமார் 14 கிலோ மீற்றருக்கு யானைகளின் வருகையினை தடுப்பதற்காக மின்சார கம்பி வேளிகளை அமைப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு இதன்போது மாகாண அமைச்சர் வழங்கினார்.

அட்டாளசை;சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா, அம்பாறை மாவட்ட வன விலங்கு பாதுகாப்பு உதவி காட்டிலதிகாரி டபிள்யூ கீத்ஸ்ரீ மெவான், காட்டிலதிகாரி ஏ.எம். தர்மதாச, ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ. இஸ்மாயில் மற்றும் விவசாய பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE