......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

அதிபர் தரத்துக்கு பதவியுயர்வு பெற்றவர்கள் கௌரவிப்பு




(ஹனீக் அஹமட்)

ஆசிரியர் சேவையின் அதிபர் தரத்துக்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட, இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவர் ஏ.பி. கமால்டீன் தலைமை தாங்கினார்.

இதன்போது அதிபர்களாக பதவியுயர்வு பெற்றுக் கொண்ட இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 7 அங்கத்துவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, சட்டக்கல்வியைப் பூர்த்தி செய்த இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவரான ஆசிரியர் எம்.பி.முபாரக், சங்கத்தின் ஆலோசகரான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். சதாத் ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சிறப்பு அதிதியாக, ரி.பி. ஜாயா பௌண்டேசன் அமைப்பின் செயலாளர் எம். பைசல் பழீல் கலந்து கொண்டார். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE