......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

இஸ்லாமிய முறைப்படிதான் பின்லேடன் அடக்கம் செய்யப்பட்டார்: அமெரிக்கா

உலக நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது.


ஆனால், இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அமெரிக்க இராணுவம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் பின்லேடன் உடல் முழுமையான இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்யப்பட்டது. கொல்லப்பட்டவுடன் அவரது உடல் அமெரிக்காவின் காரிவின்சன் விமானத்தின் மூலம் தூக்கி செல்லப்பட்டது.

முன்னதாக அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு, வெள்ளை துணியில் கிடத்தப்பட்டது. அதன் பின்னர் இஸ்லாமிய மத கருத்துக்களை ராணுவ அதிகாரி வாசித்தார். அது அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

பின்னர், அவரது உடலை ஒரு கனத்த பையில் கட்டி கடலில் படிப்படியாக மூழ்கடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 31 பக்கங்கள் இருந்தது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE