......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது விஞ்ஞானத்துறையில் பெரும் சாதனை

லக்ஷ்மி பரசுராமன்
அரசியல் கண்ணோட்டத்தில் மட்டம் தட்டுவது நாகரீகமற்ற செயல் - அமைச்சர் டலஸ்

விண்வெளிக்கு செய்மதியினை அனுப்புவதற்கு அரசாங்கம் பொது மக்களினதோ பாராளுமன்றத்தி னதோ பணத்தை செலவு செய்ய வில்லை. எதனையும் அரசியல் கண் ணோட்டத்துடன் பார்த்துப் பழகி விட்ட எமது எதிர்க்கட்சியினர் செய் மதியினையும் அரசியல் கண்ணோட்டத் தில் பார்வையிடுவது அவர்களது அறி யாமையையும் இயலாமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கை விண்வெளிக்கு செய்மதி யினை அனுப்பிவைத்துள்ளமையானது வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயம். இது விஞ்ஞானத்துறையில் நிலை நாட்டியுள்ள சாதனை. இலங்கை முன்னேற்றப் பாதையில் செல்லும் இந்த தருணத்தில் இதனையிட்டு பெருமை கொள்ளாது அரசியல் கண் ணோட்டம் கொண்டு பார்த்து அதனை மட்டம் தட்டி வருவது உண்மையில் கவலைக்குரிய விடயமெனவும் அமைச்சர் கூறினார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுக்காலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கம் பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பணத்தில் விண்வெளிக்கு செய்மதியனுப்பியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அமைச்சர் டலஸிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதியின் புதல்வர் இதன் பணியில் மும்முரமாக ஈடுபட்டதன் விளைவாகவே எதிர்க் கட்சியினர் அவதூறுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஏதாவதொரு நல்ல காரியம் நடத்தப்படுமானால் அதனை யார்? எந்த வயதினர்? எப்படி செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பாராட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
உண்மையில் இந்த திட்டத்திற்காக அரசாங்கம் எந்த செலவீனத்தையும் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களினதோ பாராளுமன்றத்தின் பணம் இதற்காக செலவு செய்யப்படவில்லை. எதனையும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து பழகிவிட்ட எதிர்க் கட்சியினர் விண்வெளிக்கு அனுப்பிய செய்மதியினையும் அரசியலாக பார்ப்பது அவர்களது இயலாமையின் வெளிப்பாடேயாகுமென்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE