......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

1950 களில் நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டம்


1950 களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க “புராஜெக்ட் ஏ 119” என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டி யது. ஆனால் அத் திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.
இது குறித்து “தி டெய்லி மெயில்” வெளியிட்டு ள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- சோவியட் ஒன்றியம் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பின்னர் பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் ஒன்றியத்துக்கு ஒரு பேரதிர்ச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு இராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா. மேலும், சோவியத் ஒன்றியத்தை விட தானே வலிமை யானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE