......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

ஆகாயத்தையும் அடகுவைத்துவிட்டது: ஐ.தே.க

(அழகன் கனகராஜ்)

செயற்கைக்கோள் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நிபந்தனைகளை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, ஆகாயத்தையும் சீனாவிடம் இந்த அரசாங்கம் அடகுவைத்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'செயற்கைக்கோளுக்கு அரசாங்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்; ஆணைக்குழு, இது இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான கணக்கு வழக்குகள் என அறிவித்துள்ளது. 

வெளிநாட்டுகளில் கடன் பெற்றிருந்தால் திறைசேரியில் பிணை முறிகளை வைப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு வைப்பீடு செய்யப்பட்ட 5000 கோடி பிணை முறிகளுக்கான உறுதி என்ன? அரசாங்கம் இதற்கான கணக்கு வழக்குகளை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. 

செய்மதிக்கான அனுமதியை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்; ஆணைக்குழுவிடமோ, பாதுகாப்பு அமைச்சிடமோ பெறவில்லை. அப்படியானால் சீனாவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன?

2013ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பில் வெளிநாட்டு கணக்கு வழக்குகளை நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த கணக்கு வழக்குகளை நாடாளுமன்றத்திற்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

செய்மதியின் மூலம் பெறப்படும் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறாயின் அது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வலய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளுக்கு நல்லதல்ல. 

எதிர்கால இளைஞர்களை அரசாங்கம் சீனாவிடம் விற்றுவிட்டது. ஆகாயத்தையும் அடகுவைத்துவிட்டது. ஆதலால், இந்த விவகாரம் தொடர்பிலான நிபந்தனைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் அடிக்கொரு தடவை பழுதடைந்து விடுகின்றது. இவ்வாறானதொரு நிலை இதற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுவதுடன் அந்த செய்மதியில் இலங்கையின் தேசிய கொடி மட்டுமே இருப்பதாகவும் அதற்கென 5000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது' என்றார்.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE