......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

முஸ்லிம்களுக்கு நிமால் சிறிபால டி சில்வா கூறிக் கொள்ள விரும்புவது...?


முஸ்லிம்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது நாம் அனைவரும் தூரநோக்குடனும் அமைதியாகவும் சிந்தித்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


நாட்டில் சகல இன மக்களும் அமைதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை நாட்டில் நிலவும் தற்போதைய கால கட்டத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அதற்கு குந்தகம் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

பதுளை ஜும்மா பெரியபள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட கூட்டத்தை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக ஊவா மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ ஜயசிங்க குறிப்பிட்டார். பள்ளிவாசல் நிர்வாக சபையினர், வர்த்தக பிரமுகர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பதுளை நகரில் கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்று வரும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த விசேட கூட்டம் திங்கள் மாலை 5 மணிக்கு பதுளை ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அந்த விசேட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
பதுளை நகரில் காலா காலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்தை சிரமத்துக்கு உட்படுத்தும் வகையில் ஒரு சில விஷமிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சகல இனங்களும் ஒன்றாக வாழக்கூடிய அமைதியான சூழலை உருவாக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை சிரமத்துக்கு உட்படும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கமாட்டாது.

பதுளை நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான அருவருக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டவர்கள் எமது சுதந்திரக் கட்சியில் இருந்து எப்போதோ விரட்டப்பட்டவர்கள், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரினதும் உரிமைகளையும் அரசாங்கம் பாதுகாக்கும்.
சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். கடந்த கால தேர்தல்களில் பதுளை வா
ழ் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளமை எமக்கு நன்றாக புரியும்.

இதன் போது அமைச்சரின் இணைப்பு அதிகாரி பேர்சி விஜேதாஸ உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இம்தியாஸ் பகீர்டீன் பதுளையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பான நீண்ட விளக்கமொன்றையும் வழங்கினார்.

அதனையடுத்து விசேட துஆ பிரார்த்தனையொன்றும் இடம்பெற்றது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE