ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான தியாவட்டுவான் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட எரிபொருள் நிறப்பு நிலையம் இன்று (25.11.2012) திறந்து வைக்கப்பட்டது.
மூன்று கோடி ஐம்பது லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் எரி பொருள் நிறப்பு நிலையத் திறப்பு விழாவில் பெற்றோலிய வளத்துறை மற்றும் எரிபொருள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டு திறந்து வைத்தார்.எரிபொருள் நிறப்பு நிலைய உரிமையாளர் ஏ.எல்.எம்.ஹனீபா, பொற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய முகாமையாளர் ரீ.கேதீஸ்வரன் மற்றும் பொற்றோலிய கூட்டுத் தாபனத்தின் பிராந்திய பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.
(kattankudt)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.