......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

உதயன், வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு


கூறாத விடயத்தை திரிபு படுத்தி செய்தி பிரசுரிப்பு;

தலா 10 கோடி ரூபா கோரி மானநஷ்ட ஈடு கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையான உதயன் மற்றும் வலம்புரி நாளேடுகளிடம் தலா 10 கோடி ரூபா நட்ட ஈடு கோரி இராணு வத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெய சூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மான நட்ட வழக்கு யாழ். மாவட்ட நீதிமன் றத்தில் நேற்று முன்தினம் வெள் ளிக்கிழமை தாக் கல் செய்யப்பட்டதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசேகர வாரமஞ் சரிக்கு தெரிவித்தார். இவ்விரு பத்திரிகைகளும் இராணுவத்தளபதி கூறாத விடயத்தை கூறியதாக செய்தி வெளியிட்டுருப்பதால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜூலை 11ம் நாள் இந்த இரு நாளேடுகளும் வெளியிட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 10 கோடி ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கோரி யுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப் பாளர் பிரிகேடியர் ரஞ்சித் ராஜபத்திரன, இராணுவம் சட்டத்துக்கு மேலாகவும் இல்லை, அதேவேளை கீழாகவும் இல்லை. இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நாம் போராடுவோம் என்று கூறியுள்ளார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE