தந்தையை அடித்துக் கொலை செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள அவரது இரு மகன்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தனது தந்தையை புதல்வர்கள் இருவர் கொலை செய்தமை தொடர்பான வழக்கு காலி மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே காலி மேல் நீதிமன்ற நீதவான் கே.டி.கே.ஹிரிம்புரேகம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்;.
57 வயதான ஹெட்டிஹந்தி தர்மதாச என்ற தங்களது தந்தையை வெட்டுக்கத்தியாலும் பொல்லாலும் அடித்துக் கொலை செய்தததாக அவரின் இவ்விரு மகன்களுக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பூஸ்ஸா, கதுருவ பகுதியிலேயே கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. காணியொன்று சம்பந்தமாகவே இத்தகராறு ஏற்பட்டதாகவும் அதனையடுத்தே இவ்விரு மகன்களும் தங்களது தந்தையை அடித்து கொலை செய்துள்ளனர்.
வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய காலி மேல் நீதிமன்ற நீதவான் இரு மகன்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 2,500 ரூபா தண்டமும் விதித்தார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.