லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்
* தென்பகுதியிலுள்ளோரை வடக்கு, கிழக்கிற்கு மாற்றுங்கள்
* தமிழ் கைதிகளின் விசாரணைகள் தாய் மொழியில் அவசியம்
தென் பகுதி சிறைச்சாலைக ளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கைதிகளை அந்த மாகாணங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றி அங்கு விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.
பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை களை முன்னெடுத்திருப்பதாகக் கூறும் அரசாங்கம், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவித்து இனங்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன்:-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட் டிருக்கும் தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தமிழ் கைதிகளை விடுவிப்பது தொடர் பில் பல்வேறு தடவைகள் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். கொழும்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வடக்கு, கிழக்கு சிறைச் சாலைகளுக்கு மாற்றப்பட்டு, அங்கு தமிழ் சட்டத்தரணிகள் ஊடாக தமது மொழியில் வழக்கு விசாரணைகளைக் கொண்டு நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைக் கைதிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில் கெளரவமாக நடத்தப்பட வேண்டும். அத்துடன், பிள்ளைகளுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் பெண்களை விடுவிப்பது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். பல நாடுகளில் இடம் பெற்ற யுத்தங்கள் முடிவுக்கு வந்த பின்னர் சிறைகளில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு புனர்வாழ்வு நிலையங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டுள்ளன. எனினும், வெலிக்கடைச் சிறைச்சாலை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் பலர் தொடர்ந்தும் உள்ளனர். இவர்கள் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.