......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 7 November 2012
எஜமான் தாக்கியதில் காது செயலிழந்து விட்டது: இலங்கை பணிப்பெண்
(tamilmirror)
'சம்பளம் கேட்டதற்காக தன்னை தனது எஜமான் சித்திரவதை செய்ததாகவும் அதனால் தனது வலது பக்க காது செயலிழந்து விட்டதாகவும் ஓமான், மஸ்கெட்டில் உள்ள இலங்கை பணிப்பெண்; ஒருவர் கூறியுள்ளார்.
இவரது முகமும் கைகளும் வீங்கியிருந்ததை தான் கண்டதாக இவரது நண்பர் ஒருவர் கூறினார். கூரான ஒரு பொருளினால் தனது எஜமான் தலையில் அடித்ததாகவும் காதுகளை கைகளினால் குத்தியதாகவும் இவர் கூறினார்.
'இவரது முறைப்பாட்டை தொடர்ந்து நாம் அவரது எஜமானரை அழைத்து விசாரித்தோம். அப்போது அவர் மருத்துவ செலவுகளை ஏற்பதாக கூறினர்' என மஸ்கெட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழில் ஆலோசகர் எம்.எம்.தேசப்பிரிய கூறினார்.
'45 வயதான முலயா நோனா இலங்கை தூதரகத்தில் ஒக்டோபர் 2012 இல் அடைக்கலம் கோரினார். அவரை முதலில் தனியார் வைத்தியசாலையிலும் பின் அரசாங்க வைத்தியசாலையிலும் அனுமதித்தோம்'.
எக்ஸ் கதிர் மற்றும் சீரீ ஸ்கான் சோதனைகள் இவரது வலது காதில் உள்காயம் இருப்பதை காட்டியுள்ளது.
'இலங்கையிலிருந்து வேலையாட்களையும் பணிப்பெண்களையும் வேலைக்கு எடுக்கும் பதிவு செய்த நிறுவனங்கள் 40 உள்ளன. இலங்கை தொழிலாளர்கள் தமது தொழில் கொள்வோரினால் துன்புறுத்தப்படுவதை தடுப்பதற்காக இலங்கை தூதரகம் ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து வேலை செய்வோம்' என தேசப்பிரிய கூறினார்.
இலங்கையிலிருந்து 6,000 பேர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓமானுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுச்சென்றுள்ளனர். இவர்களில் 3000 பேர் பணிப்பெண்களாக தொழில்வாய்ப்புகளை பெற்றுள்ளனர். மொத்தமாக 17,000 இலங்கைப் பணிப்பெண்கள் ஓமானில் தொழில்செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.