மாவனல்ல பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவனல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியொருவரை கண்டித்தார் என்றே மேற்படி அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து மேற்படி அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த அதிபரால் கண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.