......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

தோட்டத் தொழிலாளர்களது ஊ.சே.நி., ஊ.ந.நி. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

லக்ஷ்மி பரசுராமன்
எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி:


மேற்படி தோட்டங்கள் அரசாங் கத்துக்கு சொந்தமானவையென சுட்டிக்காட்டிய அமைச்சர் காமினி லொக்குகே, அங்கே ஊழியர்கள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்கள் குறித்து அறிந்து வைத்திருப்பதாகவும், விரைவில் அக்கம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்தில் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிளான்டேசன் கம்பனி ஆகியன நிருவகிக்கும் பெருந் தோட்டங்களில் வேலை செய்யும் சுமார் 700 தோட்ட உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் அமைதியான போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு சுமார் 10 வருட காலத்திற்கும் அதிகமாக ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப் படாமை யினால் தாங்கள் இறப்பதற்கு முன்னர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டுமென் பதே தமது கோரிக்கை யென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்மானங்கள் பெற்றுக்குகொடுக்கப்படா விட்டால், கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டியவிலுள்ள தொழில் அமைச்சு ஆகியவற்றின் முன்னால் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த திட்டம் தீட்டியிருப்பதாகவும் சங்கத் தலைவர் தம்மிக்க மேலும் கூறினார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE