இருதய நோயாளர்களுக்கு நாக்கின் அடியில் வைக்கும் ரீ.என்.ரீ. (T.N.T) மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுமானால் ஒரு மாதத்துக்குப் போதுமான மருந்தை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஊடாக வழங்க அரச மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு தயாராக உள்ளது.
இது பற்றி இப்பிரிவின் பணிப்பாளர் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இந்த ரீ.என்.ரீ. மருந்துக்கு தனியார் மருந்தகங்களில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உடன் கண்டறியுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார். தனியார் துறை மருந்தகங்களில் ஏதா வது மருத்துப் பொருளுக்கு தட்டுப் பாடு நிலவுமானால் அதில் தலையிட்டு, அது பற்றிய காரணங்களை அறிவது சுகா தார அமைச்சின் பொறுப்பாகும்.
தட்டுப்பாடு நிலவுமானால் தங்கு தடையின்றி அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும். அரச மருந்தகங்களில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லை. ஆறு மாதங்களுக்குப் போதுமான மருந்து அரச மருந்துக் களஞ்சியத்தில் உண்டு.
தனியார் துறையில் இம்மருந்து இல்லையானால் மாதத்துக்குப் போது மான மருந்தை மருந்து விநியோக பிரிவினால் அரச மருந்துப் பொருட் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தனியார் மருந்தகங்களுக்கு வழங்க இயலும் என்று பணிப்பாளர் டாக்டர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.