......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 21 November 2012

கடும் மழை; இருவர் உயிரிழப்பு

மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்து வருகின்ற அடை மழையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


நொனாகம, அம்பலாந்தோட்ட பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவரும் கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் அகப்பட்டு ஒருவருமே உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள தாழ்நிலப்பகுதிகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

மாகந்துர, ரஞ்சாகொட, அம்பலாந்தோட்ட, கும்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களும் வீதிகளுமே இவ்வாறு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE