......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் ஓய்வு


இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரியில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் நெருங்கிய உறவை பேணும் பராக் ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

டெல் அவிவில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் 70 வயதான எஹுட் பராக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி பொதுத் தேர்தல் மூலம் புதிய அரசு அமைக்கப்பட்டதும் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.
‘அரசியல் வாழ்க்கையில் இருந்து விடைபெற தீர்மானித்தேன். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என பராக் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். தமது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை கழிக்கும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எஹுட் பராக்கின் முடிவை மதிப்பதாக கூறிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தமது அரசில் அவர் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இஸ்ரேல், பிராந்தியத்தில் பெரும் சவாலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே எஹுட் பராக் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டும் இஸ்ரேல் அதனை நிறுத்த சர்வதேச அழுத்தத்தை கோரி வருவதோடு ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று காசாவுடனான உக்கிர மோதலுக்கு பின் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட்டு ஒரு சில தினங்களிலேயே எஹுட் பராக் ஓய்வு பெற்றுள்ளார்.
எகுட் பராக் கடந்த 2007 முதல் 2009 வரையான காலப் பகுதியில் முன்னாள் பிரதமர் எஹுட் ஒல்மாட்டின் காலத்திலும் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார். பின்னர் நெதன்யாகுவின் அமைச்சரவையிலும் எஹுட் பராக் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்த காலப் பிரிவில் அவர் இஸ்ரேலின் துணைப் பிரதமர் பதவியையும் வகித்தார். இதில் 1999 முதல் 2001 மார்ச் வரையான காலப் பிரிவில் எஹுட் பராக் அந்நாட்டின் பிரதமராகவும் செயற்பட்டுள்ளார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE