கிழக்கு மாகண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடித்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்கள் கடந்த கால யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டதாகும். இப்பகுதி மக்கள் மத்தியில் தற்போது குடிநீர், போக்கவரத்து, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், மலசலகூடம் மற்றும் வீடமைப்பு, பேன்றவைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச செயலகங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை அதிகரித்து இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கு உதவுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அம்பாறை மாவட்ட செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.