......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

சரவணபவன் எம்.பி.யின் வாகனம் மீது கல்வீச்சு

(எஸ்.கே.பிரசாத்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 


இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்ற போதே அவரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சரவணபவன் எம்.பி – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். 

யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வாசலுக்கு முன்னால் குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். 

இச்சம்பவத்தின்போது அவ்விடத்தில் இராணுவத்தினர் இருந்தனர். இருப்பினும் சந்தேகநபர்களைப் பிடிக்கும் முயற்சிகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பு குழு நிலை விவாதத்தின்போதும் எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க உள்ளதாக சரவணபவன் எம்.பி மேலும் தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE