......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

அடையாள வேலை நிறுத்தத்தில் இணையுமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்


-அஸ்ஸிஹாபி-
எதிர் வரும் டிசம்பர் 4ஆம் திகதி செவ்வாய்க் கிழமையன்று  ஒன்றிணைந்த தொழில் சங்கங்கள் நடாத்தவுள்ள அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை ஒன்றிணையுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ்,தேசிய பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.சலீம் ஆகியோhர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசாங்கம் சம்பள அதிகரிப்பு என்ற பேரில் எதிர்வரும்  ஜனவரியில் அதிகரிக்க உள்ள முதலாம் கட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில், அரச ஊழியர்களின் கையில் மிஞ்சப் போவது வெறும் ஐந்து ரூபா (750-695+50=5)மாத்திரமேயாகும்.
ஆசிரிய சேவை தாபிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட சம்பளத்தை தொடர்ந்து 2/97 சுற்றறிக்கைமூலம்   முரண்பாடு ஏற்படுத்தப்பட்டது. அம்முரண்பாடு 6/2006(IV) சுற்றறிக்கை மூலம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இம்முரண்பாடுகளுக்குத் தீர்வாக வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 6/2006 (VIII) சுற்றறிக்கை மற்றும் தயாரிக்கப்பட்ட புதிய பிரமாணக்குறிப்பு அத்தோடு, கையொப்ப மிடப்படாத 2010/38 சுற்றறிக்கை, கையளிக்கப்பட்ட முன்டிகல அறிக்கை என அனைத்தும் கிடப்பில் கிடக்கின்றன.
தற்போது கல்வித்துறையில் பழைமையான சுற்றறிக்கைகளைப் புதுப்பிக்க குழு வேறு நியமிக்கப்பட்டுள்ளது. இது கற்றவர்களை ஏமாற்றும் மற்றொருவடிவமாகும்.
எனவே, அமுல்படுத்தப்படாதிருக்கும் சுற்றறிக்கைகளை உடன் அமுலுக்கு கொண்டு வரக்  கோரி நடாத்தப்படவுள்ள இவ் அடையாள நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களையும் அதிபர்களையும் ஒன்றிணையுமாறு கோருகின்றோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE