......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 24 November 2012

வரவு-செலவுத்திட்டம் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.


புளத்தசிங்கள பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.

வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக சபையின் தலைவர் மட்டுமே வாக்களித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாக இருக்கவில்லை. 

வாக்கெடுப்பின் போது அவையில் இருந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் எதிர்த்து வாக்களித்தமையினால் வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

(tamilmirrro)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE