......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

நூதனசாலை திருட்டு; சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு

கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார். 


குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கே  கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

இந்த சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள்  மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார். 

பல நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களான எம்.அஜித் குமார, ஆர்.பி.சுரங்க ஜனகந்த, எம்.ரி.சன்முகனேவர் சந்திரசேகர ஆகியோரின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தாக்கல் செய்த மனுவில் சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.  
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE