......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 28 May 2012

எப்பப் பார்த்தாலும் பூனையோடு சுற்றிய மனைவி... வெறுத்து விலகிப் போன கணவர்!


 Israeli Woman Chooses Her 550 Cats Over Her Husband டெல் அவிவ்: எங்கு பார்த்தாலும் பூனை ... பெட்ரூமில், பாத்ரூமில், சமையலறையில் ... கிட்டத்தட்ட 550 பூனைகள்... இப்படி பூனையோடு குடித்தனம் நடத்தி வந்த தனது மனைவி மீது வெறுப்படைந்த இஸ்ரேல் நபர் ஒருவர் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் வழியில் நடையைக் கட்டியுள்ளார்.

மனைவியோடு சேர்ந்து படுக்க விரும்புவது கணவனுக்கு இயல்பான விஷயம்தான். ஆனால் இந்த இஸ்ரேலியருக்கு மட்டும் அது நடக்கவே முடியாத ஒன்றாக மாறிப் போய் வி்ட்டது. காரணம், பெட்ரூமில் நூற்றுக்கணக்கான பூனைகள். தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்க வேண்டிய மனைவி, பூனைகளைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாக இருந்ததால் சலிப்பாகிப் போனார்.
சாப்பிடப் போகலாம் என்றால் டைனிங் டேபிளிலும் குண்டக்க மண்டக்க பூனைகள் கூட்டம். சாப்பிட எடுத்தால், அதைப் பறித்துக் கொள்ளும் பூனைகள்.
பாத்ரூமுக்குள் போகலாம் என்றாலும் அங்கும் பூனை மயம்... வீட்டுக்குள் எங்குமே சுதந்திரமாக நட முடியாத நிலை. அவரது மனைவியோ, கணவரை விட பூனைகளுக்குத்தான முதல் மரியாதை கொடுத்தார். கணவர் சாப்பிட்டாரா, குளித்தாரா, சந்தோஷமாக இருக்கிறாரா என்பது குறித்துக் கவலைப்படாமல், பூனைகள் பின்னாலேயே திரிந்தார்.
ஏம்மா, இதையெல்லாம் எங்காவது கொண்டு போய் விட்டுட்டு வரக் கூடாது, என்னால முடியல என்று அவர் மனைவியிடம் புலம்பிப் பார்த்தார். உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க என்று மனைவி கூறி விட்டார். இதற்கு மேலும் பொறுக்கக் கூடாதுடா பெருமாளு என்ற கதையாக, நேராக கோர்ட்டுக்குப் போய் விட்டார்.
என் மனைவிக்கு என்னை விட அவளோட பூனைதான் முக்கியமாப் போச்சு யுவர் ஆனர். எனவே டைவர்ஸ் கொடுத்துடுங்க என்று மனு போட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கணவன், மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தனர். கணவருக்காக பூனைகளை விட முடியாது. அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. அப்பாடா, சாமி ஆள விடுங்கடா என்று நிம்மதியாக கிளம்பிப் போய் விட்டார் கணவர். புருஷன் போனா என்ன, பூனை இருக்குல்ல என்று சந்தோஷத்துடன் வழக்கம் போல வாழ்ந்து வருகிறார் மனைவி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE