கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச
சபையின் எதிர்கட்சித்தலைவர் YL
சுலைமா லெப்பை முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம்
கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான இரண்டு மாடி கட்டிடம் (26-11-2012) திங்கட்கிழமை
கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார பண்பாட்டலுவல்கள் காணி, காணி
அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால்
திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை
வலயக்கல்விப் பணிப்பாளர் AM
மன்சூர், நிந்தவூர்
கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க
உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து
சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமார க்கு
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின்
எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி
கௌரவித்தார்.



No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.