......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானம்?

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் பொதுக்கூட்டத்தின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை முன்வைக்க அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த யோசனையைக் கொண்டுவரும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா, கெனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன அடங்குவதாக உயர்மட்ட ராஜதந்திர தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கடந்த கூட்டத்தொடரின் போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது என்றும் இதனை அடிப்படைக் காரணமாகக் கொண்டே அமெரிக்கா மீண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவின் இந்த புதிய பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறும் பட்சத்தில் அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.  
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE