......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

கால்நடைக்கு புல் வெட்ட சென்றவரைக் காணவில்லை

நோர்வூட் எல்படை கீழ் பிரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


கடந்த 25.11.2012 ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து கால் நடைகளுக்கு புல் வெட்ட சென்ற பழனியான்டி ராமசாமி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புல் வெட்ட சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தேடிபார்த்த பொழுதும் அவரை காணக்கிடைக்கவில்லை என்பதோடு இன்றுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மூன்றுப் பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய பழனியான்டி ராமசாமி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்
இவர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களுக்கு (மகன் பிரபாகர் - 0712180104 ) அல்லது நோர்வூட் பொலிஸாருக்கு அறிவிக்கும் படி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE