......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 14 November 2012

வாழைச்சேனையில் 75 ஏக்கரில் சோளப் பயிர்ச் செய்கை!


Solamஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் பதவிப் பிரமாணம், பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு வாழைச்சேனை தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் 75 ஏக்கர் நிலப் பரப்பில் சோளப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.


ஐம்பது வருடங்களாக பொருளாதார நட வடிக்கைக்குப் பயன்படுத்தப்படாத 300 ஏக்கர் காணியில் ஒரு பகுதியைத் துப்புரவு செய்து இந்த உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி மங்கல சீ. செனரத் தெரிவித்தார்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கு இணங்க கிழக்கின் நவோதயம் திட்டத்தின் கீழ் சோளம் உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் பிரகாரம், இத்திட்டமும் மேற்கொள்ளப்படுவதாக செனரத் தெரிவித்தார்.


அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, பிரதி அமைச்சர் சரத் குணரத்ன, அமைச்சின் செயலர் கலாநிதி விலீ கமகே உட்பட கூட்டுத்தாபன ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள்  இந்த நிகழ்வில் பங்குபற்றுவர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்.)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE