......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் 200 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் 200 பேரை சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வெலிக்கடை சிறைச்சாலையில் சமீபத்தில் இடம்பெற்ற மோதலையடுத்தும் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதியும் மேற்படி ஊழியர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது வெளிநாட்டு கைதிகள் யாரும் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பதை அறிய ஒவ்வொரு வெளிநாட்டு தூதரங்களினால் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.

27 கைதிகள் உயிரிழந்துள்ளதையடுத்து இரவு நேரங்களில் பேய் ஆவிகள் சுற்றி வருவதாக வதந்திகள் பரவின. இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் சமய சடங்குளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(veeraksari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE