......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்து: 120 பேர் பலி


பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


மேலும் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளனர்.
இதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவின்றன.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE