......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

அமைச்சர் கேட்கும் '13'

(அழகன் கனகராஜ்)

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவர் கேட்கின்ற '13' தொடர்பில் 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு'  ஊடகவியலாளர் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்பட்டது.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டியிலேயே இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ஹப்புஹாமியே மேற்படி விவகாரம் தொடர்பில் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தம் தேவையா? இல்லையா? என்ற வாதவிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் தனக்கு '13' என்றால் பிடிக்கும் என்றும் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

அதாவது தனக்கு '13' பிடிக்குமாம் ஏனென்றால் 13 வயதில்தான் பெண் பிள்ளைகள் பூப்படைகின்றார்களாம் அதனால் தனக்கு  13  பிடிக்கும் என்று  கூறியுள்ளார். இவ்வாறான சிந்தனை கொண்டவர்களுக்கு  மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE