......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 1.2 பில். டொலருக்கு சேதம்


மூன்று பள்ளிவாசல்களுடன் 200 வீடுகள் தரைமட்டம்
காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக எட்டு நாட்கள் நடத்திய தாக்குதல்களில் அங்கு 1.2 பில்லியன் டொலர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அரசு அறிவித்துள்ளது.

“இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதம் 1.245 பில்லியன் டொலர்களாகும்” என ஹமாஸ் அதிகாரி தஹர் அல் நுசா காசா நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.
இதில் இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதல்களில் 545 மில்லியன் டொலருக்கு நேரடி சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மேலும் 700 மில்லியன் டொலருக்கு மறைமுகமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக காசா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி எட்டு தினங்கள் இரவு, பகல் பாராமல் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 200 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதோடு, மேலும் 8000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர குடியிருப்புகள் அல்லாத 42 கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளன. இதில் ஹமாஸ் அரசின் தலைமை கட்டடமும் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் இருக்கும் மூன்று பள்ளிவாசல்கள் மற்றும் சுகாதார நிலையம் ஆகியனவும் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான அரச அலுவலகங்களும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
எனினும் காசா மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட இறுதி அறிக்கையில் காசாவில் 1500 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் 19 கட்டளை மையங்கள், 26 ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் கிடங்குகள், நூற்றுக்கணக்கான நிலத்தடி ரொக்கெட் ஏவு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
மோதல் உக்கிரமடைந்த நவம்பர் 14 முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவின்படி, இந்த காலப்பிரிவில் 166 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிவிலியன் களாவர். இதன் போது மேலும் 1235 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டோருள் குறைந்தது 43 சிறுவர்களும் 13 பெண்களும் உள்ள டங்குகின்றனர்.
மறுபுறத்தில் இஸ்ரேல் மீது காசாவில் இருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நால்வர் பொதுமக்கள் என்பதோடு, இருவர் இராணுவத்தினராவர். மேலும் 240 இஸ்ரேலியர் காயமடைந்துள்ளனர்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE