அவர்கள் கூறும்போது மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இவ் ஆய்வுக்காக ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந் தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதன் முடிவில் தங்கள் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் தாய்மார்களைவிட ஆறு மாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது. உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரோக்கியமான இரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக் காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.