இது பற்றி அப் பகுதி கிராமிய மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த இளம் பெண் மித்தெனியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவளுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. இவ்விதம் பணத்தைச் சூறையாடிய அந்தப் பெண் திடீர் என்று அப் பகுதியில் இருந்து மறைந்து விட்டாள் என்று தெரிவித்த புகாரை அடுத்தே பொலிஸார் அந்தப் பெண்ணைத் தேடிப் பிடித்து கைது செய்தனர்.
மட்டக்களப்பு கோயில் வீதியில் ஒரு வீட்டில் இருந்து 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஒரு பெண் களவாடி தலைமறைவாகிவிட்டார். அந்த பெண்ணும் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளாள்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பெண்கள் இன்று ஆண்களைவிட அதிக மதிநுட்பத்துடன் திருட்டு வேலைகளில் ஈடுபடுவதிலும் ஆண்களை ஆசை வார்த்தை காட்டி பணம் பறிப்பதிலும் கில்லாடிகளாக இருக்கின்றார்கள் என்று சொன்னார்.
இப்போது பஸ்களை ஆண் முடிச்சுமாறிகளைவிட பெண் முடிச்சு மாறிகள் ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் சொன்னார். நெருக்கமான ஒரு பஸ்ஸில் ஒரு பெண் ஒரு ஆணுக்கருகில் நின்று கொண்டு பஸ் பிறேக் பிடிக்கும் போது அவன் மேல் விழுவது போன்று நடித்தால், நிச்சயம் அவள் ஒரு முடிச்சு மாறி என்பதை உணர்ந்து பஸ் பயணிகள் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை செய்தார். (ள)(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.