சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் உயர் கல்வியமைச்சின் செயலாளர்
மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று இன்னமும் நாடு திரும்பாத விரிவுரையாளர்களு க்கெதிராக சட்ட நடவடி க்கை எடுக்கப்படுமென உயர் கல்வியமைச்சின்
செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனான ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 வருடங்களுக்குள் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற விரிவுரையாளர்களுள் 642 பேர் தமது ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் இதுவரையில் நாடு திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விரிவுரையாளர்கள் முதுகலைமாணி மற்றும் தமது கலாநிதி பட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அனுமதியுடனும் ஒப்பந்த அடிப்படையிலும் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற போதும், தமது கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பாது அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிடுகின்றனர்.
இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதுடன் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு எதிர்நோக்கும் நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கெதிராக அவசியம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் அவர் கூறினார்.thinakaran
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.