மக்காவில் இருந்து எப். எம். பைரூஸ்
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை கவுன்சில் ஜெனரலான டொக்டர் ஏ. உதுமா லெப்பையும் அமைச்சருடன் இம்மாநாட்டில் கலந்துகொண்டார். இம்முறை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக்கவனிக்க அமைச்சர் பெளஸி வெள்ளியன்று மக்கா வந்து சேர்ந்தார்.
அமைச்சர் பெளஸி ஹஜ் யாத்திரிகர்களின் தங்குமிடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசில் ஹஜ்ஜுக்காக செய்யப்பட்ட வசதிகள் பாராட்டத்தக்கவை என அமைச்சர் பெளஸி தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த ஹஜ் விவகார அமைச்சர்களும், உலகின் புகழ்பூத்த அறிஞர்பெருமக்களும், ஹஜ் யாத்திரிகர்களும் பங்குபற்றி வருகின்றனர். இம்மாநாடு தொடர்ந்து இரு நாட்களுக்கு நடைபெறும். மக்காவில் சீரான காலநிலை நிலவுகிறது. ஹஜ்ஜுக்காக மக்கா வந்துள்ள யாத்திரிகர்கள் ‘தவாப்பில்’ ஈடுபட்டு வருகின்றனர். ‘கஃபதுல்லாஹ்’ பகுதியில் பெரும் நெரிசல் காணப்படுவதால் ஹரம் ஷரீபுக்கு வெளியிலும் பெரும் யாத்திரிகர் கூட்டம் காணப்படுகிறது-
சவூதி அரேபிய அரசாங்கம் சுகாதார வசதிகளை திறம்பட மேற்கொண்டுள்ளது. வெள்ளியன்று ஜும்ஆத் தொழுகைக்காக கஃபதுல்லா பகுதி காலை 10 மணியளவிலேயே நிரம்பியது. ஹஜ் யாத்திரிகர்கள் கஃபாவுக்கு உள்ளே செல்ல முடியாது வெளியில் வெயிலில் நின்று தொழுதனர்.thinakaran.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.